• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் மீண்டும் கத்திகுத்து தாக்குதல் – மூவர் சம்பவ இடத்தில் பலி

Sep 21, 2022

கனடாவின் ரொறன்ரோவில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட கத்திகுத்து தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி ரொறன்ரோவின் இட்டாபிகொக்கில் அமைந்துள்ள இஸ்லிங்டன் மற்றும் பெர்காமொட் ஆகிய வீதிகளுக்கு இடையிலும் மற்றும் ரொறன்ரோவின் ஜேன் வீதி மற்றும் டிரிப்வுட் வீதிக்கு அருகாமையிலும் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

முதலாவது தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாவது சம்பவத்தில் இரண்டு பேர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed