• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியா மாமடு பகுதியில் திடீரென பரவிய காட்டுத் தீ!

Sep. 19, 2022

வவுனியா மாமடு பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் நேற்று மாலை 5.00 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவல் பலமணிநேர போராட்டத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மாமடு சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் திடிரேன தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியமையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த குழுவினர் பல மணிநேர போராட்டத்திற்கு மத்தியில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ளதா போன்ற பல்வேறு கோணத்தில் மாமடு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed