• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான். 530 குழந்தைகள் உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் மரணம்

Sep. 15, 2022

பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வெள்ளம், தெற்காசிய தேசத்தின் பெரும் பகுதிகளை மூழ்கடித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்தது. 

இதனால் அந்நாட்டின் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. பல குடும்பத்தினர் கனமழை மற்றும் வெள்ளத்தில் வீடுகளை இழந்துள்ளனர். 

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 391 மிமீ (15.4 அங்குலம்) அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், கனமழை வெள்ளத்தால் ஏராளாமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கனமழை மற்றும் வெள்ளத்தினால் இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் இன்று வரை உயிரிழந்த 1486 பேரில் 530 பேர் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வெள்ளம் காரணமாக சுமார் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 12,000-க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் சிக்சி படுகாயமடைந்துள்ளனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed