வெளிநாடுகளில் இருந்து இலங்கை பணியாளர்கள் அனுப்பிய பணத்தொகை கடந்த மாதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூலையில் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 279.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதன்படி, ஜனவரி-ஜூலை 2022க்கான மொத்த பெறுமதி 1,889.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இந்நிலையில், 2022 ஆகஸ்டில் உத்தியோகபூர்வ வழிகளில் இலங்கை பணியாளர்கள் அனுப்பிய பணம் 325.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதன் அடிப்படையில் 2022 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் அனுப்பிய பணத்தின் மொத்த பெறுமதி 2,214.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதேவேளை, 2022 ஜூலையில் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் அனுப்பப்பட்ட தொழிலாளர்களின் பணமானது 2021 இன் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 50% குறைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.