• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் சாதனை படைத்த‌ வவுனியா மாணவர்கள்!

Sep. 10, 2022

யாழ்ப்பாணம் – கந்தர்மடம் சைவபிரகாச பாடசாலையில் இடம்பெற்றுள்ள பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட பளு தூக்கும் போட்டியில் வவுனியா – நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் பதக்கங்களை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

17க்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 49 kg எடை பிரிவில் நா. நகிந்தன், 82kg தூக்கி தங்கமும் ஜொ. ஜதுர்சன் 55kg எடை பிரிவில் 97kg தூக்கி வெள்ளி பதக்கமும் கி. சுபிஸ்கரன் 59kg எடை பிரிவில் 100kg தூக்கி வெள்ளி பதக்கமும் யோ. சாருஜன் 55kg எடை பிரிவில் 80kg தூக்கி 5ஆம் இடமும் 20வயதுக்குட்படட ஆண்கள் பிரிவில் அ. கோகுலன் 65kg எடை பிரிவில் 125kg பழுவை தூக்கி சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில் தங்க பதக்கம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவரகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed