• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் மரத்திலிருந்து விழுந்து ஒருவர் மரணம்

Sep. 8, 2022

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதி, மாதகல் பகுதியில் வசித்துவந்த குடும்பஸ்தர் ஒருவர் மரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று மாலை 5 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

குறித்த, இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் மரத்தில் இருந்த. கொப்புகளை வெட்டுவதற்காக ஏறியவேளையே மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு நோயாளர் காவு வண்டியை அழைத்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டது.

பாக்கியநாதன் ஜோசப் இமானுவேல் (வயது 66) என்ன நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed