• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெள்ளவத்தையில் கட்டடத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

Sep. 5, 2022

வெள்ளவத்தையில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து மாயா அவனியு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 12 மாடி கட்டிடம் ஒன்றின் 11வது மாடியை சுத்தம் செய்யும் போது ஜன்னலில் இருந்து கீழே விழுந்துள்ளார் என தெரியவந்தது.

உயிரிழந்தவர் கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர்.

சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed