• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் கோர விபத்தில் உயிர் பிழைத்த அதிர்ஸ்டசாலி

Sep. 2, 2022

கனடாவில் மரணத்தின் விளிம்பைத் தொட்டு உயிர் தப்பிய அதிர்ஸ்டசாலியொருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தின் மிஸ்ஸிசாகுவாவில் இடம்பெற்ற கோர விபத்தில் நபர் ஒருவர் சிக்கியுள்ளார்.

401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையின் மாவிஸ் வீதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துபாரிய ட்ரக் ஒன்றின் மீது கார் ஒன்று மோதியதால் இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக ட்ரக் வண்டி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பின்னால் வந்த கார் வேகமாக ட்ரக்கில் மோதுண்டுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 40 வயதான சாரதி காயமடைந்துள்ளார்.

வாகனம் முற்று முழுதாக சேதமடைந்துள்ளதாகவும், வாகனம் சேதமடைந்துள்ள நிலையை பார்த்தால் அதில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு கிடையாது என்றே கருத நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் தெய்வாதீனமாக குறித்த காரில் பயணித்த 40 வயதான சாரதி உயிர் ஆபத்து இன்றி காயங்களுடன் தப்பித்துள்ளார்.

விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் ஒன்றாரியோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed