அல்-கொய்தா தலைவர் நடமாட்டத்தை காட்டிக்கொடுத்த பாகிஸ்தான் அரசு
அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்ட அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முழுமையாக வெளியேறியது. இந்த நிலையில் அந்நாட்டில் அமெரிக்க ராணுவத்தின் எந்த…
ஆடிப்பூர நாளில் துர்க்காதேவி சித்திரத்தேரில் உள்வீதி உலா
ஆடிப்பூர நன்னாளை முன்னிட்டு வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்த ஆடிப்பூர விசேட பூசை வழிபாடுகள் திங்கட்கிழமை(01.8.2022) சிறப்பாக இடம்பெற்றது. முற்பகல்-11 மணிக்குப் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி முற்பகல்-11.30 மணிக்கு வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள்…
வடக்கு உட்பட 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாளை (04) காலை 08.30 மணி வரையான காலப்பகுதிக்குள் நடைமுறைக்கு வரும் வகையில் 12 மாவட்டங்களில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும்,…
சிறுவர் காப்பகத்திலிருந்து மாயமான 15 வயது சிறுமி
கொழும்பு வெள்ளவத்தை- டபிள்யு.ஏ.டி. சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுதி நேற்று (2)அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. தப்பியோடிய சிறுமி கடந்த 3 நாள்களுக்கு முன்னரே ரன்முத்துகல…
நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு விசேட அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. ஆலய வருடாந்த மகோற்சவத்தின் போது பெருமளவில் பக்தர்கள் ஒன்று கூடுவதனால் திருட்டு சம்பவங்களை தடுக்க கூடியவாறு…
சில நீர்த்தேக்கங்களின் திறக்கப்பட்டுள்ள வான் கதவுகள் !
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல் கொத்மலை, காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை, லக்ஷபான உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் இந்த விடயத்தினைக்…
யாழில் இரவு நேர ரயில் சேவை?
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் காங்கேசன்துறை – கல்கிசை இடையே இரவு நேர தொடருந்து சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்படும் சேவை ஓகஸ்ட் 11ஆம் திகதி இரவு காங்கேசன்துறையிலிருந்து மீள கொழும்புக்கு…
2021 உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்றை கல்வியமைச்சர் வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் 15 முதல் 30 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரான்சுக்கு பயணிப்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
பிரான்சுக்கு பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும், ஆகஸ்ட் 01ஆம் திகதி முதல், கோவிட் தொடர்பான அனைத்துப் பயணக் கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்துப் பயணிகளும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இனி தடுப்பூசி பெற்றதற்கான, அல்லது கொரோனாவிலிருந்து…
இரு நூற்றாண்டுக்கு பிறகு முதல் முறையாக பிறந்துள்ள உடும்புகள்
ஈக்வடார் கடற்பகுதியில் உள்ள கலபகோஸ் தீவில் இரு நூற்றாண்டுக்கு பிறகு முதல் முறையாக உடும்புகள் பிறந்துள்ளது. இந்த உடும்புகள் இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்துள்ளதாக கலபகோஸ் தேசிய பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய பூங்காவின் செய்திக்குறிப்பின்படி, இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின் என்பவர்…
வெற்று எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலை
வெற்று எரிவாயு சிலிண்டர்கலின் புதிய விலையினை லிட்ரோ நிறுவனம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. 2.5Kg சிலிண்டர் 7000 ரூபாய்க்கும் 5Kg சிலிண்டர் 11 000 ரூபாய்க்கும் 12.5Kg சிலிண்டர் 14000 ரூபாய்க்கும் 37.5Kg 35 000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.