பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதத்தில் பருவமழை தொடங்கியது. அது தற்போது வரை நீடித்து வருகிறது. சமீப நாட்களாக நாட்டின் பல இடங்களிலும் பலத்த மழை பெய்த வண்ணம் இருக்கிறது. இதனால் நாட்டின் பல நகரங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. நாட்டின் மொத்தமாக உள்ள நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் 3 கோடி மக்கள் பாதிப்படைந்து இருப்பதாகவும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது வரை 1,162 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.