• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த 9ஆம் தர மாணவன்

Aug. 30, 2022

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவர், 2021 உயர்நிலைத் தேர்வில் மேம்பட்டுள்ளார்.

கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த தேவும் சனஹாஸ் ரணசிங்க என்ற மாணவனே உயர்தர பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

வணிகவியலில் தனியார் பரீட்சையாளராக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி மூன்று பாடங்களிலும் பி சித்திகளைப் பெற்றார்.

05 மாத குறுகிய காலத்தில் பரீட்சைக்குத் தயாராகி இந்த விசேட சாதனையைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், தேவும் சனஹாஸ் ரணசிங்க 08 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் போதே சாதாரண பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சையில் 5 ஏ, 2 பி மற்றும் ஒரு சி சித்திகளைப் பெற்றுள்ளார்.

சட்டத்தரணியாகவும் கிரிக்கெட் வீரராகவும் மாறுவதே தனது இலட்சியமாக இருந்ததாக தேவும் சனஹாஸ் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed