• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவிலிருந்து வந்து யாழில் தங்கியோருக்கு ஏற்ப்பட்ட‌ நிலை

Aug. 29, 2022

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் விடுதி அறையில் தங்கியிருந்தவர்களின் உடைமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கனடா நாட்டினை சேர்ந்தவர்களின் உடமைகளே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் இருந்து வந்தவர்கள் தங்கி இருந்த விடுதி அறையில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த விடுதி அறையில் தீ விபத்து ஏற்பட்ட போது விடுதி பணியாளர்கள் விரைந்து செயற்பட்டமையால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed