• Mi.. Feb. 5th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம்: வளிமண்டலவியல் திணைக்களம்

Aug. 28, 2022

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதற்கமைய, இன்று யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed