• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது 30 பவுண் நகைகள் கொள்ளை

Aug. 27, 2022

நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது 30 பவுண் நகைகள் திருடப்பட்ட நிலையில் சந்தேகத்தின் போரில் சிறுவன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லூர் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்ற போது நாடளாவிய ரீதியில் இருந்தும் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல்களை பயன்படுத்தி இரண்டு தாலிக்கொடிகள் உள்ளிட்ட சுமார் 30 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளன.

அத்தோடு பெண்ணொருவரின் சங்கிலியை அறுக்க முற்பட்ட வேளை நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் ஆலய சூழலில் திருட்டுக்களில் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்ட சிறுவன் உட்பட குறித்த ஐவரையும் விசாரணை செய்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed