கடந்த 7 ஆண்டுகளில் முகநூல்பயன்பாடு 71 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக குறைந்து விட்டதாக அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பியூ ரிசார்ச் சர்வே நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 2014 – 2015ம் ஆண்டில் அமெரிக்க பதின்பருவத்தினர் (13 – 17) மத்தியில் முகநூல்பயன்பாடு 71 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது அது 32 சதவீதமாகக் குறைந்துவிட்டது.