• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கதிர்காமம் கோவிலில் 12 கோடி ரூபாய் திருட்டு: பொலிஸில் முறைப்பாடு

Aug 26, 2022

கோயிலின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்காக பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய பணம் ருஹுணு மகா கதிர்காமம் ஆலயத்தின் பூசாரிகளின் வருமானமாக மாறியதன் காரணமாக மூன்று மாதங்களில் இழந்த வருமானம் சுமார் 12 கோடி ரூபா (1,200 இலட்சம்) என தெரியவந்துள்ளது.

பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ், விகாரை ஆலய சட்டத்தின் பிரகாரம், கபு பெருமக்களுக்கு ஏதாவது கொடுப்பனவோ அல்லது சம்பளமோ வழங்கப்பட வேண்டும், ஆனால் கோவிலின் தினசரி வருமானம் அவர்களின் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவிலில் 15 பூசாரிமார் உள்ளனர்.

பொதுவாக பக்தர்களிடம் இருந்து பெறப்படும் வருமானத்தில் 50 சதவீதத்தை கோயில் பராமரிப்பு, பணியாளர் ஊதியம், வளர்ச்சி பணிகள் போன்றவற்றுக்கு வழங்க வேண்டும் ஆனால் அவர்களிடமிருந்து கோயிலுக்கு பணம் வரவில்லை.

கோயில் கோயில் சட்டப்படி பணம், தங்கம் போன்றவை கோயிலுக்கு வழங்கப்பட வேண்டும்.

ஆனால் அவை  பூசாரிமாரினால் கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கதிர்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்த பஸ்நாயக்க நிலமே, பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கும் அறிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed