• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜேர்மன் நகரமொன்றில் நச்சு வாயு பரவல்.

Aug. 24, 2022

ஜேர்மன் நகரமான Mannheimஇல் உள்ள துறைமுகத்தில் அபாயகரமான திரவம் ஒன்று கொட்டியதைத் தொடர்ந்து நச்சு வாயு பரவல்.

 நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்ற பொலிசார் பாதிப்பு.

ஜேர்மனியின் Mannheim நகரிலுள்ள துறைமுகத்தில் அபாயகரமான திரவக் கசிவு ஏற்பட்டு நச்சு வாயுவை உருவாக்கியதை அடுத்து, நகரின் ஒரு பகுதி மூடப்பட்டது. 

நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஜேர்மனியின் Mannheim நகரிலுள்ள துறைமுகத்தில் அபாயகரமான திரவக் கசிவு ஏற்பட்டதையடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கிய சுமார் 16 பொலிஸ் அதிகாரிகள் நச்சுப்புகையால் பாதிக்கப்பட்டார்கள். அவர்களில் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட, ஒருவருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டது.

 அந்த இடத்தில் 150 மீற்றர் உயரத்துக்கு நச்சுப்புகை எழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, Mannheim துறைமுகத்தைச் சுற்றி 1.3 கிலோமீட்டர் சுற்றளவில் குடியிருப்பவர்கள் தங்கள் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு நகர அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அப்பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் ரயில்களும் வேறு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed