• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சப்பற‌த்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார் நல்லூர் கந்தன்

Aug. 24, 2022

நல்லூர் கந்தனின் மகோற்சவத்தின் 23ஆம் திருவிழாவான இன்று(24) மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து பாரம்பரிய பறை முழங்க முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா நாளை வியாழக்கிழமையும் (25) நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (26) தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.

இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed