• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இலங்கையர்கள் குடியேற வாய்ப்பு!!

Aug. 24, 2022
Siruppiddynet.com

ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு குடிபெயர தங்களின் விருப்ப படிவத்தை (EOI) ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பட்டதாரிகள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களும் 16 ஆகஸ்ட் 2022 முதல் தங்களின் விருப்ப படிவத்தை (EOI) சமர்பிக்கும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

2021-22இல் திறமை அடிப்படையில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் குடிபெயர சுமார் 16,500 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டிருந்த நிலையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான அதன் குடிபெயர்வு திட்டத்தின் கீழ், அம்மாநிலத்திற்கு 4,435 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் குயின்ஸ்லாந்து Skilled Migration Program (subclass 190 and subclass 491)-க்கு தகுதியுள்ள skilled workers விண்ணப்பிக்க முடியும்.

ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் Skillselect இல் சமர்ப்பிக்கப்பட்ட புத்தம் புதிய Expression of Interest (EOI)கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என Migration Queensland தெரிவித்துள்ளது. ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட Expression of Interest (EOI)களை புதுப்பிக்க முடியாது எனவும் Migration Queensland தெரிவித்துள்ளது.

குயின்ஸ்லாந்து மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் விசாக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகளைப் பூர்த்திசெய்யும்பட்சத்தில், ஒரு Expression of Interest (EOI)ஐச் சமர்ப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்:

  • Skilled Nominated visa (subclass 190)
  • Skilled Work Regional (Provisional) visa (subclass 491)

Skilled Nominated visa (subclass 190) என்பது skilled migrants குயின்ஸ்லாந்து மாநிலத்தில் எங்கும் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கின்ற நிரந்தர விசா ஆகும்.

Skilled Work Regional (Provisional) visa (subclass 491) என்பது skilled migrants குயின்ஸ்லாந்தின் regional பிராந்திய பகுதிகளில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கின்ற விசா ஆகும்.

2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் Skilled Nominated visa (subclass 190) இற்கு 3000 இடங்களும் Skilled Work Regional (Provisional) visa (subclass 491) இற்கு 1200 இடங்களும் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Business Innovation and Investment Program (subclass) 188 – இக்கு நடப்பு நிதியாண்டில் 235 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Business Migration programஇற்கு தகுதிபெறும் சிறு வணிக உரிமையாளர்களும் பின்வரும் விசாக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகளைப் பூர்த்திசெய்யும்பட்சத்தில், ஒரு Expression of Interest (EOI)ஐச் சமர்ப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்:

  • Subclass 188 – Business Innovation stream
  • Subclass 188 – Investor stream
  • Subclass 188 – Significant Investor stream.

16 ஆகஸ்ட் முதல் புதிய Subclass 188 – Entrepreneur stream-இற்கும் விண்ணப்பிக்கமுடியும் என்று Migration Queensland தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed