பெரும்போகத்திற்கு தேவையான உரவகைகளை விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிக்கையில், எதிர்வரும் பெரும்போகத்திற்குரிய உரவகைகளை விவசாயிகளுக்கு நெல்விதைப்பதற்கான ஆரம்ப வேலைகளை செய்வதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னரே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு சகல கமநல மாவட்ட ஆணையாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு உரிய வேளைக்கு உரிய உரவகைகளை வழங்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதீத அக்கறையுடன் இருப்பதால் இதனை ஒரு தேசிய தேவையாக கருதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இரசாயன உரம் 50 கிலோ கிராம் கொண்ட உரமூடை 10,000 ரூபா வுக்கு வழங்கப்படும். விவசாயிகளின் தேவைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
இரசாயன உரவகைகளைக் கோரும் விவசாயிகளுக்கும் அதனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.