• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகளவில் முதலிடத்தை பிடித்த சுவிஸ்.

Aug 20, 2022

உலகில் அதிக சராசரி சம்பளம் வாங்கும் நாட்டு பட்டியலில் சுவிஸ்ட்சர்லாந்து முதலிடமும், இலங்கை கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தை அடுத்து உலகிலேயே அதிக சராசரி சம்பளம் வாங்கும் இரண்டாவது நாடாக சிங்கப்பூர் உள்ளது.

CEOWORLD இதழ் வரிக்குப் பிறகு சராசரி நிகர சம்பளங்களின் பட்டியலை வெளியிட்டது, இது 2022-ல் உலகின் மிக உயர்ந்த மற்றும் குறைந்த சம்பளத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த பட்டியலின் படி, முதல் இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்தில் சராசரி மாத நிகர சம்பளம் 6,142.10 அமெரிக்க டொலர்களாகும்.

அதேசமயம் ஆச்சரியப்படும் விதமாக, சிங்கப்பூர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, அதன் சராசரி மாத நிகர சம்பளம் 4,350.79 அமெரிக்க டொலர்களாகும்.

சிங்கபூரை தொடர்ந்து, அவுஸ்திரேலியா (US$4,218.89), அமெரிக்கா (US$3,721.64) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (US$3,663.27) ஆகியவை இடம்பிடித்துள்ளன.

இதற்கு நேர்மாறாக, குறைந்த சராசரி மாதாந்த நிகர சம்பளத்துடன் இலங்கை கடைசி இடத்தை பிடித்துள்ளது. சராசரி மாதாந்த நிகர சம்பளம் 143.62 அமெரிக்க டொலர் என்று அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, இலங்கை பணமதிப்பில் ரூ. 51716.08 ஆகும்.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் US$163.17 மற்றும் நைஜீரியா US$166.33 குறைந்த சராசரி மாதாந்த நிகர சம்பளத்துடன் அடுத்த இரண்டு இடங்களையும் பிடித்துள்ளன

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed