• Fr. Dez. 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வல்லை பற்றைக்குள் மீட்கப்பட்ட முதியவர் ஒருவரின் சடலம்

Aug. 20, 2022

வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம்  இன்று (20)  நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் தொண்டைமானாறு வல்லை வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் குருமூர்த்தி (வயது -75)  என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கடந்த மூன்று நாள்களாக காணாமற்போன முதியவரின் சடலம் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் உருக்குலைந்து காணப்படுவதனால் அவர் அணிந்திருந்த ஆடைகளை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தார்கள். வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்து வருகிறார்கள்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed