• Fr. Dez. 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்காவில் நெய் விற்பனை: ஆவின் நிறுவனத்தின் புதிய முயற்சி!

Aug. 18, 2022

ஆவின் நிறுவனம் தயாரிக்கும் நெய் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் மட்டும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக திமுக ஆட்சியில் ஆவின் நிறுவனம் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதும் புதிய பொருட்கள் ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் ஆவின் தயாரிக்கும் பொருட்கள் தமிழகத்தையும் தாண்டி இந்தியாவையும் தாண்டி வெளிநாட்டிற்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின

அந்த வகையில் தற்போது ஆவின் தயாரிக்கும் நெய் அமெரிக்காவில் விற்பனை செய்ய தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் அமெரிக்காவில் ஆவின் நெய் விற்பனை நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed