• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முட்டை, கோழி இறைச்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

Aug. 17, 2022

முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகளின் அதிகரிப்பை தொடர்ந்து அவற்றின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் ஒன்றிய அமைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கால்நடை உணவுகளின் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சந்தையில் வெள்ளை முட்டை ஒன்றின் விற்பனை விலை 63 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விற்பனை விலை 68 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

கோழித் தீனி மற்றும் புண்ணாக்கு ஆகியவற்றின் விலை 15 ரூபாய் முதல் 115 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பால் கறக்கும் பசுக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு வகை கால்நடை உணவு 35 ரூபாவிலிருந்து 85 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் கால் நடைகளுக்கு வழங்கப்படும் மருந்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், கால்நடை பண்ணை தொழிலை தொடர்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என கால்நடை பண்ணையாளர்கள் ஒன்றிய அமைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed