ஆரம்பமாகவுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளை திங்கள் , செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அடுத்த வாரம் வியாழக்கிழமை 11ஆம் திகதி அரசாங்க விடுமுறை என்பதினால் கல்வியமைச்சு இவ்வாறு தீர்மானித்துள்ளது.
வெள்ளிக்கிழமையன்று மாணவர்களுக்கு வீட்டை அடிப்படையாகக்கொண்ட கல்வி நடவடிக்கையை முனனெடுத்தல் அல்லது இணைய வழி மூலமான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் அனைவரும் ஆகக் குறைந்தது வாரத்தில் 03 நாட்கள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சேவை அசௌகரியங்கள் காரணமாக நகர்ப்புற பாடசாலைகளில் 3 தினங்களுக்கு மாத்திரம் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
இருப்பினும் இவ்வாறான, பாதிப்புகள் இல்லாத நாட்டின் சில மாவட்டங்களில் வாரத்தின் ஐந்து தினங்களிலும் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை வட மாகாண அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் (8) வாரத்தின் ஐந்து நாட்களும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.