• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டு!

Aug. 7, 2022

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் ஜயனார் கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் கடந்த முதலாம் திகதி பிற்பகல் வேளையில் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது

அங்கு 10 பவுண் நகை மற்றும் இலங்கை ரூபா, வெளிநாட்டு நாணயங்கள் என்பன திருடப்பட்டுள்ளன என்று முறையிடப்பட்டுள்ளது.

வீட்டில் கணவன் மற்றும் மனைவி வசித்து வரும் நிலையில் அவர்கள் இருவரும் வேலைக்குச் சென்ற பின்னர், வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், அலுமாரியினுள் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

சில காலங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வந்த உறவினர்கள் அந்த வீட்டில் தங்கிச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed