• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்காவில் திடீர் தீ விபத்து. 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு

Aug. 6, 2022

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

நேற்று நள்ளிரவு 2.45 மணியளவில் திடீரென்று வீட்டில் தீப்பற்றிய நிலையில், 5 முதல் 7 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகளும், 18 முதல் 79 வயதிற்குட்பட்ட 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் 3 இளைஞர்கள் எவ்வித பாதிப்புமின்றி பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தீ விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed