• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆடிப்பூர நாளில் துர்க்காதேவி சித்திரத்தேரில் உள்வீதி உலா

Aug. 3, 2022

ஆடிப்பூர நன்னாளை முன்னிட்டு வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்த ஆடிப்பூர விசேட பூசை வழிபாடுகள் திங்கட்கிழமை(01.8.2022) சிறப்பாக இடம்பெற்றது.

முற்பகல்-11 மணிக்குப் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி முற்பகல்-11.30 மணிக்கு வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள் அலங்கார நாயகியாக சூலம் ஏந்தி அழகிய சிறிய சித்திரத் தேரில் எழுந்தருளினாள்.

அதனைத் தொடர்ந்து முற்பகல்-11.50 மணியளவில் அடியவர்கள் புடைசூழ சிறிய தேரின் உள்வீதி உலா ஆரம்பமானது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed