எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசையான இன்றைய தினம் வியாழக்கிழமை தந்தைக்காக விரதம் இருந்து , காலமான தந்தைக்கு மதியம் படையல் செய்து , அந்த உணவை சாப்பிட்டு தமது விரதத்தை முடித்துக்கொள்வார்கள்.
இந்நிலையில் இன்றைய தினம் எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த ஒருவர் தமது விரதத்தை வீதியில் முடித்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.