• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வாகன இலக்கங்களை மாற்றினால் கடும் சிறை.

Jul 22, 2022

எரிபொருளுக்காக வாகன இலக்கங்களை மாற்றினால் கடும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை தலைமையகத்தின் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

வாகனங்களின் இலக்க தகடுகளை மாற்றி வாகனங்களை பயன்படுத்திய நிலையில் சிக்கினால், 20 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது மூன்று மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றத்திற்காக வாகனத்தின் உரிமையாளரை கைது செய்ய முடியும் எனவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 மோட்டார் வாகன திருத்தச் சட்டம்

1984 ஆம் ஆண்டு இலக்கம் 40 மோட்டார் வாகன சட்டம் மற்றும் 2009 ஆம் இலக்கம் 88 மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தில் தண்டனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் வாகன இலக்க தகடுகளை மோசடியாக மாற்றுவது, பயன்படுத்துவது, இலக்க தகடுகளை அழித்தல் என்பன தண்டனை வழங்கக்கூடிய குற்றங்களாகும்.

இதே குற்றத்திற்காக இரண்டாவது முறை சிக்கினால், 30 ஆயிரம் ரூபாவுக்கு குறையாத 50 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்படாத அபராதமும் மூன்று மாதத்திற்கு குறையாத சிறைத்தண்டனையை வழங்கவும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் நிலைய மோசடி

இந்நிலையில் வாகன இலக்கங்களின் இறுதி இலக்கத்திற்கு அமைய நேற்று முதல் எரிபொருள் விநியோகிக்கப்படுவது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் வாகன இலக்கங்களை மாற்றிக்கொண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு சென்றமை தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed