ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள டொஸ்ரஹூக் மாகாணத்தில் மலைப் பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தை உள்பட 8 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். 23 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலை துருக்கி நடத்தியதாக ஈராக் குற்றம் சாட்டியுள்ளது. குர்தீஷ் படைகளை குறிவைத்து நடந்த தாக்குதலில் விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர் என்று தெரிவித்தது.
இந்த தாக்குதலுக்கு ஈராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, இந்த தாக்குதல் ஈராக்கின் இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதாகும் என்றார். ஆனால் ஈராக்கின் குற்றச்சாட்டை துருக்கி மறுத்துள்ளது.