• Fr. Dez. 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.வலிகாமத்தில் குரக்கன் செய்கையில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்.

Jul. 17, 2022

யாழ்.மாவட்டத்தின் வளங்களில் முக்கியமான ஒரு தானிய வகையாக காணப்படும் பெருமளவு இரும்புச் சத்தைக் கொண்டுள்ள குரக்கன் செய்கையில் தற்போது யாழ்.வலிகாமத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது .

நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் எதிர்காலத்தில் பாரியளவு உணவு நெருக்கடியும் ஏற்படக் கூடும் எனத் துறைசார் வல்லுநர்களால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உணவு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் தமது உணவுத் தேவையைத் தாமே ஈடு செய்யும் வகையில் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் விவசாயிகள் இவ்வாறு குரக்கன் செய்கையில் ஆர்வம் காட்டி வருவதைக் காண முடிகின்றது.

குறிப்பாக யாழ்.வலிகாமத்தின் கட்டுவன், குப்பிழான், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, சுன்னாகம், அச்செழு, ஊரெழு, உரும்பிராய், உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குரக்கன் செய்கையில் பரவலாக ஈடுபட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed