• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

காரைநகர் பகுதியில் எரிபொருள் நிலையத்தில் மோதல்.

Juli 9, 2022

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(8) இரவு 08 மணியளவிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் மற்றையவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை சேர்ந்தவரே காயமடைந்த நிலையில் காரைநகர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed