• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் தண்ணீர் பவுசரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த 07 வயது சிறுமி!

Juli 8, 2022

யாழில் தண்ணீர் பவுசரின் மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தண்ணீர் பவுசரியன கீழ் விழுந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது யாழ்.நாரந்தனை பகுதியில் கடந்த திங்கள் (04) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி அப்பகுதியைச்சேர்ந்த யசோதரன் ஜாக்சனா (வயது7) என்ற சிறுமி என பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

அப்பகுதியில் வந்த தண்ணீர் பவுசரின் மீது ஏறி சிறுவர்கள் விளையாடிய நிலையில் குறித்த சிறுமி எதிர்ப்பாராத விதமாக தண்ணீர் பவுசரின் அடியில் விழுந்து சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed