உலக அதிசயங்களில் ஒன்றான பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் துருப்பிடித்துள்ளதாகவும், அதை முழுமையாக பழுதுபார்க்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் 2024 ஆம் ஆண்டு தலைநகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, நிறப்பூச்சு வேலை செய்யப்படும் என்று பிரெஞ்சு பத்திரிகையான மரியன்னே மேற்கோள் காட்டிய இரகசிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
324 மீட்டர் (1,064 அடி) கோபுரம் உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு மில்லியன் பார்வையாளர்களை வரவேற்கிறது.
இது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஸ்டாவ் ஈபிள் என்பவரால் கட்டப்பட்டது.
ஆனால் மரியன்னே பத்திரிகை மேற்கோள் காட்டிய நிபுணர்களின் ரகசிய அறிக்கைகளில் இது மோசமான நிலையில் இருப்பதாகவும் துருப்பிடித்திருப்பதாகவும் தெரிவிக்கின்றன.
கோபுரம் தற்போது 2024 ஒலிம்பிக்கிற்கு தயாராகும் வகையில் 60m (£51.7m) செலவில் மீண்டும் வண்ணம் பூசப்படுகிறது. வர்ணம் பூசப்படுவது இது 20வது முறையாகும்.
கோபுரத்தை மேற்பார்வையிடும் நிறுவனம், சொசைட்டி டி எக்ஸ்ப்ளோயிட்டேஷன் டி லா டூர் ஈஃபில் (SETE), சுற்றுலா வருவாயை இழக்க நேரிடும் என்பதால், அதை நீண்ட காலத்திற்கு மூடத் தயங்குகிறது என்று அந்த பத்திரிகை மேலும் கூறியது.