கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் றொரன்டோவில் 22 வயதான இளைஞர் ஒருவர், நூதன முறையில் பல நபர்களிடம் பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞர், போலி காசோலை மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்களை மக்கள் சுமத்தியுள்ளனர்.
றொரன்டோவில் பலரை இவ்வாறு போலி காசோலைகள் மூலம் ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையான பத்து மாத காலப் பகுதியில் இந்த குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.
முகநூல், ஸ்னெப்செட் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களின் வாயிலாக பலரை ஏமாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டிசைனர் காலணிகள், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக போலி காசோலைகளை குறித்த நபர் வழங்கியுள்ளார்.
போலியாக கூடுதல் தொகைக்கு காசோலை வழங்கி, பொருட்களை கொள்வனவு செய்து மிகுதிப் பணத்தையும் வாங்கிக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது 22 வயதான டைரிஸ் கெம்பல் என்ற நபரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல்தறையினர் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டுமென காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.