• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

50,000 ரூபாயை கடந்த சைக்கிள் விலை.

Jul. 1, 2022

எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சைக்கிள் விற்பனை நிலையங்களை மக்கள் அதிகளில் நாடுகின்றனர்.

மக்கள் சைக்கிள் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ள நிலையில், அதன் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.

தற்போதுவரை சாதாரண சைக்கிள் ஒன்றின் விலை, 50 ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், புதிய வடிவிலான மற்றும் வெவ்வேறு தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட சைக்கிள்,  ஒரு இலட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

அதேநேரம், சைக்கிள் உதிரிப்பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed