• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் முடங்கிய பொதுப் போக்குவரத்து.

Jul 1, 2022

அச்சுவேலி – யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாத காரணத்தினால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சேவையில் ஒரு சில பேருந்துகளே சேவையில் ஈடுபடுகின்றன.

அதேவேளை பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதற்கு  டீசல் தட்டுப்பாடே காரணம் எனவும் தனியார் பேருந்து வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தான் போக்குவரத்து சேவையிலிருந்து விலகி உள்ளதாகவும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக பாடசாலை போக்குவரத்து சேவை, அத்தியாவசிய சேவைகளிலிருந்து தாம் விலகி உள்ளதாக சாரதிகள் கூறுகின்றனர். மேலும் இதனால் பேருந்து நடத்துனர்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதி, நடத்துனர் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள தாம் தற்பொழுது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதாரத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்று தெரியாத நிலையில் தவிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

அச்சுவேலி வழித்தடத்தில் 60 தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்ற பொழுதிலும் தற்போது ஆறு பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாக சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றன.

தாம் கோண்டாவில் பேருந்து சாலையில் டீசலை பெறுவதற்காக பல நாட்களாக காத்திருக்கின்ற பொழுதும் தமக்கான டீசல் இதுவரை கிடைக்க பெறவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed