அவுஸ்ரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 15 இலங்கையர்கள் !
சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த 15 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த 15 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை சென்றடைந்தனர். இவ்வாறு நாடு கடத்தப்பட்ட அனைவரும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 தொடக்கம் 30…
யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி.
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் உள்ள உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் புகையிரத்துடன்மோதுண்டதில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச்சம்பவமானது நேற்றையதினம் இரவு 7.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த…
சுவிஸில் வாழ்ந்து வரும் திரு,அருணால் வழங்கப்பட்ட உதவி.
நாட்டில் உருவாகி இருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுவிஸ் நாட்டில் வசித்து வரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திரு #அருண் சுந்தரலிங்கம் அவர்கள் தனது பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக 350000 பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை 50 குடும்பங்களிற்கு திரு #சத்தியதாஸ்…
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சா.துஷாரன் (09.06.2022, சுவிஸ்)
சுவிசில் வாழ்ந்து வரும் சாந்தகுமார் கலைச்செல்வி தம்பதிகளின் செல்ல புதல்வன் துஷாரன் அவர்கள் இன்று 09.06.2022 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அப்பா அம்மா அக்கா சன்சிகா,தங்கை சுருதிகா .மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் இவர்களுடன்…
மாட்டு வண்டில்களில் பாடசாலை செல்லும் மாணவர்கள்
இலங்கையில் நிலவும் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு மாட்டு வண்டில்களில் செல்லும் நிலையேற்பட்டுள்ளது. அந்தவகையில், களுத்துறை மாவட்டத்தில் பிரதேசமொன்றில் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு மாட்டு வண்டில்களை பயன்படுத்தி வருவதை அவதானிக்க முடிந்துள்ளது. இலங்கை தற்போது…
கனேடிய பிரஜைகளுக்காக அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை
கனேடியப் பிரஜைகள், நிரந்தரமாக வதிவோர் ஆகியோரின் பெற்றோர் மற்றும் தாத்தா,பாட்டி ஆகியோர் ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக கனடாவில் வசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனேடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்தினால் இந்த சுப்பர் வீசா நடைமுறை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த…
இன்று அதிகாலை முதல் பல பகுதிகளில் மின்தடை
நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல், கொழும்பு, கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் இவ்வாறு மின்தடை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அந்த மின்தடைக்கான காரணம் என்னவென்பது தொடர்பில் இலங்கை…
தீயில் எரிந்து உயிரிழந்த ஓய்வுபெற்ற ஆசிரியை.
வடமராட்சியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் தனது தாயார் வீட்டில் தங்கியிருந்த ஓய்வுபெற்ற 41 வயதான பிரபாகரன் பிறேமலதா என்ற ஆசிரியை இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (08-06-2022) காலை…
கனடாவில் காணாமல் போயுள்ள தமிழர் ஒருவர்.
கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்பிராஜா ஸ்ரீபதிராஜா (Thambirajah Sripathirajah) என்ற 87 வயதான முதியவரே காணாமல்போயுள்ளதாக தெரியவருகிறது. பொலிஸாரின் தகவலின் படி குறித்த நபர் ஜூன் 7ஆம் திகதி மாலை…
பிரித்தானியாவில் எரிபொருள் விலை சடுதியாக உயர்வு.
பிரித்தானியாவில் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை தினசரி உயர்வை பதிவுசெய்துள்ளது. இதனால் சாதாரண குடும்பம் ஒன்றின் சராசரி மாதாந்த வாகன எரிபொருள் செலவு 100 பவுண்சை தாண்டியுள்ளது. உக்ரைனிய போரால் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை ஐரோப்பிய நாடுகள் குறைத்ததால்…
கோண்டாவிலில் இலத்திரனியல் பொருட்களை திருடிய ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் கோண்டாவிலில் களஞ்சிய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தின் கதவை உடைத்து சுமார் 11 இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மற்றொருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டுவதாக பொலிஸார்…