• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மும்பை வெடிகுண்டு தாக்குதல்! குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

Juni 25, 2022

மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 

இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உறுப்பினர் சஜித் மஜித் மிர். இவர் மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளி ஆவார். 

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் சஜித்தை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், லாகூர் பயங்கரவாத தடுப்பு சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது நிரூபிக்கப்பட்டதால் சஜித்திற்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து சஜித் மிர் சிறையில் அடைக்கப்பட்டான்.\

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed