• Sa.. Apr. 5th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழிற்கு பெருமை சேர்த்த யாழ் இந்துக் கல்லூரி மாணவன்!

Juni 24, 2022

மாலைதீவில் நடைபெற்ற மேற்கு ஆசிய வலய 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த தரம் 7 மாணவன் பிரகலதானன் ஜனுக்சன் (Brahalathanan Janukshan) வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்கப்போட்டிகள் ஆசிய சதுரங்க சம்மேளனத்தினால் June 17 – 22ஆம் திகதி வரை மாலைதீவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

9 சுற்றுக்களைக் கொண்ட இச்சுற்றுப் போட்டியில் 6 வெற்றிகள் மற்றும் ஒரு Draw உள்ளடங்கலாக 6 1/2 புள்ளிகளுடன் ஜனுக்சன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் பாடசாலுக்கு யாழ் மண்ணிற்கும் பெருமை சேர்ந்த பிரகலதானன் ஜனுக்சனுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed