மத்திய சுவிட்சர்லாந்திலுள்ள மக்களை திடீரென எழுந்த பயங்கர சத்தம் ஒன்று பதறவைத்தது.
அந்த பயங்கர சத்தத்தால், Schwyz மற்றும் Lucerne மாகாண மக்களின் அமைதி குலைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் அதிர்ச்சியளிக்கும் விடயம் ஒன்று இருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, சூரிச் நோக்கி வந்துகொண்டிருந்த சுவிஸ் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு தகவல் கிடைக்க, அதிர்ச்சியடைந்த விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு தகவலளித்துள்ளனர்.
உடனடியாக, அந்த விமானத்தின் பாதுகாப்புக்காக இரண்டு F/A-18 ரக இராணுவ விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மின்னல் வேகத்தில் அந்த போர் விமானங்கள் புறப்பட்டுச் சென்ற சத்தம்தான் அப்படி பயங்கரமாக கேட்க, மக்கள் பதறியிருக்கிறார்கள்
ஆனால், விமானத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என பின்னர் தெரியவந்துள்ளது. அத்துடன், அந்த மிரட்டல் இந்த சுவிஸ் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானத்துக்கு விடுக்கப்படவில்லை, அந்த விமானம் புறப்பட்ட Kosovo நாட்டிலுள்ள விமான நிலையத்துக்கு விடுக்கப்பட்டது என்பதும் பின்னர் தெரியவந்தது.