• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகின் மிகப் பெரிய மிதக்கும் உணவு விடுதி தென் சீனக் கடலில் மூழ்கியது!

Juni 22, 2022

ஹொங்கொங்கில் இயங்கிவந்த ‘ஜம்போ புளோட்டிங் ரெஸ்டோரண்ட் (Jumbo Floating Restaurant) எனும் உலகின் மிகப் பெரிய மிதக்கும் உணவு விடுதி, தென் சீனக் கடலில் மூழ்கியுள்ளது.

இந்த உணவு விடுதி 46 வருடங்கள் பழைமையானதாகும்.

80 மீற்றர் (260 அடி) நீளமும் 4200 சதுரமீற்றர் பரப்பளவும் கொண்ட இந்த மிதக்கும் உணவு விடுதி, 3 மா‍டிகளைக் கொண்டது.

ஹொங்கொங்கின் உள்ளூர் மக்களையும் உல்லாசப் பயணிகளையும் கவரும் பிரதான அம்சங்களில் ஒன்றாக இந்த உணவு விடுதி விளங்கியது.

கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு இதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

எனினும் பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதற்காகவும், புனரமைப்பதற்காகவும் ஹொங்கொங்கிலிருந்து இந்த மிதக்கும் உணவகத்தை அப்புறப்படுத்துவற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்தது.

இந்த விடுதியை வேறு இடத்துக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில், தென் சீனக் கடலின் பராசல் தீவுகளுக்கு அருகில் செல்லும்போது இந்த உணவு விடுதி கவிழ்ந்தது. 

அதன்பின் திங்கட்கிழமை இரவு அது கடலில் மூழ்கிவிட்டது என அவ்விடுதியின் உரிமையாளர்களான அபேர்தீன் ரெஸ்டோரென்ட் என்ரபிரைசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed