• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

காலில் முள் குற்றி சிகிச்சைபெற்ற இளைஞன் உயிரிழப்பு

Jun 21, 2022

காலில் முள் குற்றியதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி 20 ஆம் திகதி திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், அராலி மேற்கு வட்டுக்கோட்டையை சேர்ந்த தருமராசா மதிகரன் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் ஒன்று குற்றியதாகவும், அவ்விடத்தில் வலி ஏற்பட்டுள்ளதாக கூறி வைத்திய சாலையில் சிகிச்சை பெற வந்த நிலையில் விடுதியில் அனுமதிக்கப்பட்டு இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed