• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சமூக வலைத்தளங்களின் அதிரடி முடிவு! ஏற்படவுள்ள சிக்கல்

Juni 18, 2022

போலியான கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுக்க முகநூல் உட்பட பல சமூக ஊடக வலைத்தளங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமூக ஊடக வலையமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் மெட்டா, கூகுள், டுவிட்டர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இதன்படி, போலி கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக அபராதம் விதிக்கும் முறை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான தகவல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed