• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்சியில் இளைஞரொருவரை காணவில்லை.

Jun 18, 2022

கிளிநொச்சியில் இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இலக்கம் 72 / A கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் அம்சவர்த்தன் (வயது 19) என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.

குறித்த இளைஞன் நேற்று (16) காலை 7 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழில்பயிற்சி நிலையம் ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது தாயாரான உதயராஜ் றோஜா தெரிவித்துள்ளார்.

மகன் தொடர்பில் தாயார் வெளியிட்ட தகவல்

காணாமல்போன தனது மகன் தொடர்பில் கிளிநொச்சி காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் ,தனது கணவர் உதயராஜ் 26-12-2005 அன்று யாழ்.சாவகச்சேரி மீசாலையில் வைத்து அரச படைகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.இன்று வரை அவர் தொடர்பில் எந்த தகவலும் தெரியாத நிலையில், எனது ஒரே ஒரு மகன் அம்சவர்தன் காணாமல்போயுள்ளார்.

எனவே எனது அன்பு மகன் அம்சவர்தனை கண்டுபிடித்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed