பிரான்ஸில் இலங்கை மற்றும் இந்தியர்களின் உணவகம் அமைந்துள்ள வளாகத்தில் அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் Oise மாவட்டத்திற்குட்பட்ட க்ளோஸ் தே றோஸ் Clos-des-Roses பகுதியில் சனிக்கிழமை மாலை இடம்பெற்றள்ளதாக பரிஸ்ரியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவ வரை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த உணவக வளாகத்திற்கு முன்பாக துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பபட்டுள்ளது.
இந்நிலையில் வாகனம் ஒன்றில் வந்த மர்ம நபரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கி சூட்டை நடத்தியவர் அதே வாகனத்தில் தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
காயமடைந்த நபரும் அவரது குடும்பத்தினரும் அந்த பகுதிக்கு அடிக்கடி வந்து சென்று அயலவர்களுடன் நன்கு பழகியவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை இந்த வார இறுதியில் அந்த பகுதியில் இடம்பெறும் இரண்டாவது துப்பாக்கிசூட்டு சம்பவம் இதுவென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரண்டு சகோதரர்கள் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.