சுவிட்சர்லாந்தில் புதிய கொரோனா அலை ஒன்று பரவி வருகிறது.
BA.5 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா துணை வைரஸ் ஒன்று ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவிவருகிறது. அது கவலையை ஏற்படுத்தக்கூடிய ஒரு வைரஸ் என உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது.
முந்தைய வைரஸ்களைவிட மிக எளிதாக நோயெதிர்ப்பு சக்தியைத் தாண்டி தொற்றக்கூடிய திறன் கொண்டது என்று கருதப்படும் அந்த கொரோனா வைரஸ், தடுப்பூசி பெற்றவர்களையும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்காளாகி விடுபட்டவர்களையும் மீண்டும் தாக்கக்கூடும்.
அந்த வைரஸ் ஏற்கனவே ஜெனீவாவுக்குள் நுழைந்து வேகமாக பரவிவரலாம் என தான் சந்தேகிப்பதாக சுவிஸ் வைராலஜி துறை நிபுணரான Isabella Eckerle என்பவர் கூறுகிறார்.
ஆனாலும், கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கும் திட்டமில்லை என்கிறது பெடரல் சுகாதார அலுவலகம். ஏற்கனவே தடுப்பூசி மற்றும் முந்தைய நோய்த்தொற்று காரணமாக மக்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி இருப்பதால் இந்த புதிய வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என சுகாதார அலுவலகம் நம்புகிறது. ஆனாலும், கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு அபாயம் உள்ளது என்பதில் சந்தேகமில்லை!