• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம்.

Juni 13, 2022

உலக சந்தையில் தங்கம் விலையானது பணவீக்கத்திற்கு எதிராக மீண்டும் தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளதாக நிபுணர் கணித்துள்ளனர்.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டமானது ஜூன் 14 மற்றும் ஜூன்15 திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தங்கம் விலையில் ஏற்ற இறக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

டொலரின் மதிப்பானது வரலாறு காணாத அளவு உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

திரவத் தங்கம் என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிக்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கமைய, வரவிருக்கும் விழாக்காலங்களில் தங்கத்திற்கான தேவையும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed