கனேடியப் பிரஜைகள், நிரந்தரமாக வதிவோர் ஆகியோரின் பெற்றோர் மற்றும் தாத்தா,பாட்டி ஆகியோர் ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக கனடாவில் வசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கனேடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்தினால் இந்த சுப்பர் வீசா நடைமுறை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வீசாவின் ஊடாக இரண்டாண்டுகள் மட்டுமே தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கனேடிய சமூகத்தின் இதயமே குடும்பங்கள் என குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வீசா நடைமுறையின் ஊடாக குடும்பங்களை நீண்ட காலத்திற்கு ஒன்றிணைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.